புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!

buf

எருமை மாட்டின் சொரணைக்கு சவால் விடும் நமது வியாதிகள் ராசபக்சே வீட்டில் பிரியாணி தின்ன தயாராகி வருகிறார்கள்..இதில் கூத்து என்னவென்றால் இவ்வளவு நாட்கள் அங்கே தமிழினம் முட்கம்பி வேலிகளுக்குள் சிக்குண்டு இருப்பது தெரியாதா? இப்போதுதான் இவர்களுடைய பூனைக்கண் திறந்ததா? கூர்ந்து கவனித்தால் தமிழர்களுக்கு ஒன்று புலப்படும்.. அமெரிக்கா பிரிட்டன் உட்பட மே மாத பேரவலத்தினை தடுத்து நிறுத்த முயன்ற போது அதை குறுக்குசால் ஓட்டி கெடுத்தது யார்? என்பது நன்றாகவே தெரியும்.இப்போதும் அதே நோக்கத்தில் தான் இந்த பிரியாணி தின்னும் நிகழ்வு நடைபெற போகிறது..

briyani

அங்கே மேற்குலகம் முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை விடுதலை செய்..அங்கே மனிததிற்கான அடிப்படை உரிமைகள் துளி கூட இல்லை.. gsp+ வரிசலுகையை நிறுத்துவோம் என மிரட்டிகொண்டிருக்கும் போது.. தனது சக ஆரிய பங்காளி துன்புறுவதை இந்தி யா பார்த்து கொண்டு இருக்குமா? நம் கையை கொண்டே நமது கை குத்தும் வஞ்சகத்தினை நாசுக்காக நீண்ட நாட்களாக இந்தி யா செய்து கொண்டுள்ளது அதில் முதலில் பலியாவது பதவிசுகத்திற்கு அலையும் அரசியல் பதர்கள்..

ஏற்கனவே ஈழ பிரச்சனைக்காக தெரு முக்கில்
கத்திவிட்டு போகும் இந்த வியாதிகளை உண்மையானவர்கள் என இளித்தவாய் தமிழர்கள் நம்பி இருக்கும் வரை இவர்கள் கூறுவதுதானே உண்மை.. டில்லிகாரனுக்கு தலையையும் தமிழ்நாட்டுக்கு வாலையும் காட்டும்
இவர்கள் போய் வந்து என்ன அறிக்கைவிடுவார்கள் என்பது நாம் அறிந்ததே! அது கொலையாளிகள் மேனன் மற்றும் நாராயணன் கொடுக்கும் அறிக்கையின் மீள்பதிவாகவே இருக்கும்! சக தமிழினத்தவரே சொல்லிவிட்டார்கள் அகதி முகாம்கள் நன்றாக உள்ளது என நீர் என்னயா சொல்வது என மேற்குலத்தின் வாயை அடைக்க போகிறார்கள்..

நாம் இங்கு எழுதுவது முட்கம்பிகளுக்குள் இருக்கும் தமிழர்களுக்கு தெரியாது எனினும் நம்முடைய வேண்டுகோள் ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை போன்று அங்கு வரும் எங்கள் வியாதிகளை கல்லால் அடித்து விரட்டுங்கள்.. ஆமை புகுந்த கிணறும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள் ..இவர்களை பொறுத்தவரை இது சரியே!

ஒக்ரோபர் 9, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்’நாட்டு’ மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..

தமிழ் ‘நாட்டு’ மீனவர்களை சுட ஆரிய ‘இந்தி’ யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி!
source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18074
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை?

slind

இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் செய்தாலும் செய்வார்கள் ஏன் விளக்கு கூட பிடிப்பார்கள் …இப்படித்தானே இந்தியத்தால் இவர்களுக்கு மூளை சலவை செய்யபட்டுள்ளது..

tnfisher

அவர்களை விடுங்கள்..மீனவ சமுதாய மக்களே! உங்கள் இரண்டு குப்பத்து மக்களிடையே சண்டை என்றால் இரண்டு குப்பங்களும் பற்றி எரிகிறது..எல்லையில்லாத கடலுக்குள்ளே உங்களுக்குள் எல்லை தகராறு வருகிறது.. ஆனால் உங்களை தினந்தோறும் சுட்டு கொல்லும் சிங்களினிடத்தில் ஏன் ஒருமுறை கூட திருப்பிதாக்கவில்லை? அவனிடத்தில் துப்பாக்கி இருக்கிறது சரி நீங்களும் துப்பாக்கி ஏந்தலாமே? ஏன் நீங்கள் இன்னும் போராளியாக மாறவில்லை.. அதிகமாக மீன் பிடித்தால் வருமான வரித்துறைக்காரன் 6DD(e) of Rules, 1962 பிரிவின் படி உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறானே அந்த களவாணிகளையாவது ஒரு நாள் சிறைபிடித்து வைத்தீர்களா? மற்றும் ஒரு செய்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீனவளத்துறை அதிரடி நடவடிக்கை..என்னமோ ஏதோ என்று பார்த்தால்.. கச்சதீவை தமிழக மீனவர்கள் நெருங்க கூடாதாம்.. மாற்று வழியாக ராமேசுவரம் மீனவர்களை தேவிபட்டினத்தில் மீன் பிடிக்க சொல்கிறார்கள்..அடபாவமே! அதை விட ஊர் ஏரி குளத்தில் மீன் பிடிக்க சொல்லலாமே?

கட்சதீவுக்கு ஒரு நீதி என்றால்..காசுமீருக்கும் அதே தான் தீர்வு..உடனடியாக ஒப்ப்ந்தம் போட்டு காசுமீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இணைத்துவிடல் வேண்டும்..செய்வார்களா? இந்தி அரசியலில் காலங்காலமாக ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காசுமீர் பண்டிட்டு குடும்பத்திற்கு ஆப்பு இறங்குமல்லவா?சிங்களவன் தனது பரம் எதிரியாக நினைப்பது இந்தி யர்களை அல்ல! ஈழத்து தொப்புள் கொடி உறவுகளாக உள்ள நம்மைத்தான்!.. இந்திகாரர்கள் எதிர்காலத்தில் சிங்களவன் கேட்கிறான் என்றால் நம்மையும் விற்க தயங்க மாட்டார்கள்.. எனவே தமிழக தமிழர்கள் அரசியல் வியாதிகளை நம்பி தந்தியடிப்பது..உண்ணாவிரதம் இருப்பது.. தெரு முக்கில் கத்திவிட்டு வீட்டிற்கு போய் இழுத்து போர்த்தி தூங்குவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத செயல்களை கைவிடல் வேண்டும்.. இன்று எத்தனை சிங்குகள் ..மலையாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இது எல்லாம் இளிச்சவாய் தமிழர்கள் நமக்குத்தானே?

இதற்கு தீர்வு எல்லாம் தமிழ்”நாடே”.. சாதி சமயங்கள் அற்ற சோசலிச தமிழ்நாட்டை அமைப்பதே இன்று நம் கண் முண் உள்ள தீர்வாகும்..ஆயுத வழி போராட்டமோ அறவழி போராட்டமோ..எதுவாக இருந்தாலும் தமிழ்தேசிய தோழர்களுக்கு இன்று தேவைபடுவது தொலைநோக்கு பார்வை.. அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டுவதோடு.. அணுக்கரு..வேதியல் ..உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அறிவை ஊட்டுவதாகும்.. அதுவே நம் மீது கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை ஊட்டும்.. நமக்கு இங்கே இடமில்லையென்றால் வேறு எவனுக்கும் இங்கே இடமில்லை.. இவ ர்களை சுளுக்கெடுப்பதே நமது முதற்கடமை!!தமிழ்தேசிய தோழர்கள் செய்வார்களா?

ஒக்ரோபர் 8, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும் இயந்திரங்கள் எதாவது செய்யமுடியுமா?

roudi

முகாம் மக்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சர்.
மூலம்:http://inioru.com/?p=6106
தனது முத்தானா ஒலவாயை இந்தி திருநாட்டின் சார்பாக கன்னட களவாணி ஒன்று வாய்திறந்து உள்ளது.. இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய ஆரம்பித்துவிடும்..அதுவும் தமிழனாக இருந்தால் சொல்லவே வேண்டாம்..இச்செய்தியின் அடிப்படையில் கூர்ந்து கவனித்தால் மொத்த தமிழனத்தையும் ஒல் சேலில் வாங்கிவிட்டதாக நினைப்பு.. இன்னோரு மலையாள குள்ளநரி ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி விடுவார்களாம்..அதை எப்படியாவது இந்தி யா தடுக்குமாம்..

fg

எவன எங்க அடிச்சுக்கிட்டா இவனுங்களுக்கு என்ன? இவனுங்க காசுமீர் அரிப்பையே இவர்களால் தடுக்கமுடியவில்லை..ஏன் அடுத்தவனிடத்தில் தலையிட வேண்டும்?.. தனது வீரத்தை ஒரு இனக்குழுமத்திடம் காட்டும் இவர்கள் அதே போல வம்பிழுக்கும் சீனா பாகிஸ்தானிடம் காட்ட தயாராக இருக்கிறார்களா? இவர்கள் பருப்பு அங்கே அவிய வாய்ப்பில்லை.. இளிச்சவாய் தமிழர்களிடம் மட்டும் தான் அவியும்.. ஈழ தமிழர்கள் செய்த ஒரே பிழை அவர்களை போலவே.. இவர்களும் ஆங்காங்கே (தமிழ்நாட்டை தவிர்த்து) குண்டு வைத்து காட்டியிருக்கவேண்டும்.. அதை அவர்கள் செய்யாததால் தான் இவ்வளவு தெனாவெட்டு பேச்சு! இரண்டாவது பிழை ஆறரை கோடி ஆட்டு மந்தைகளை (தமிழுணர்வாளர்களை தவிர்த்து) தொப்புள் கொடி உறவு அவரை கொடி உறவு என்று இந்தி யாவை பகைக்க விரும்பாமல் வீழ்ந்து போனது.. ஆனால் இப்போது ஒரு தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும்.என நினைக்கிறேன் இங்கே அனைவரும் ஆட்டு மந்தைகளாகவே உள்ளனர்.ஆட்டுக்கு புல்லை கொடுத்தால் தின்றுவிட்டு சாணத்தை இடுவது போல.. இவர்களுக்கும் ‘புல்லை’ கொடுத்தால் வாக்குகளாக இடுவார்கள்..

voting machines

வாக்களிக்க தயாராக இருக்கும் இயந்திரங்கள்

இந்த விசிலடிச்சான் குஞ்சுகாளை விட்டு விட்டு..ஆக்க பூர்வமாக செயல்படவேண்டும்..அடுத்த அல்லது அதற்கடுத்த இலங்கை தேர்தல்களில் மேற்குலகின் நண்பராக அறியபடுகிற ரணில் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சீனாவின் கரங்களை ஈழதமிழர்கள் பலமாக பற்ற வேண்டும்.. அதுவரை அதே ஒர்மத்தையும் வஞ்த்தையும் நெஞ்சில் நிறுத்தி கொள்ளுதல் வேண்டும்

ஒக்ரோபர் 7, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இறப்பில் கூட இல்லாத திராவிடம!!

thekkadi

எப்படியோ 25 சுற்றுலாப்பயணிகள் மட்டுமே உயிர்பிழைத் திருக்கிறார்கள். இதுவரை தமிழர்களின் 15 சடலங்கள் உட்பட இது வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சடலங்கள்?

“சாயங்காலம் ஐந்தரை மணிக்கு இந்தக் கோர விபத்து நடந்திருக்கிறது. இறந்தவர்கள் கையில் கட்டியிருக்கும் அத்தனை கடிகாரங்களும் 5.30-ல் நிற்கின்றன. 7 மணிக்குதான் போலீஸ் எங்கள் உதவியைக் கேட்டது. கொச்சியிலிருந்து 31 பேர் வந்தோம். 3 குழுவாகப் பிரிந்து ஆக்ஸிஜன் உதவியோடு மூழ்கித் தேடித் தேடி எடுத்து வருகிறோம். சில இடங்களில் 100 அடி 120 அடி ஆழம் இருக்கிறது. பாறை இடுக்குகளில் குழந்தைகளின் பிஞ்சு சடலங்கள்” -கவிழ்ந்த படகின் முதுகில் நின்றபடி முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் கப்பல்படை வீரர் அவினாஷ்.

தன் குடும்பத்தில் 9 பேரை பறிகொடுத்துவிட்டு கதறிக் கொண்டிருந்தார் பெரியகுளம் சரஸ்வதி.

“தேக்கடிக்குப் போகணும்னு நான்தானே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தேன். எங்க குடும்பத்துல 9 பேரை சாகடிச்சிட்டானே அந்த பாவிப்பய டிரைவர். நான் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருந்தேன் சார். என் மகள் தாரணியும், சந்தியாவும் “மான், யானை, காட்டெருமை எல்லாம் வரும்னு சொன்னியே எங்கேம்மா’ன்னு கேட்டு அடம்புடிச்சதுங்க. “இங்கே வாங்கம்மா… நான் காட்டறேன்’னு எங்க அண்ணன் ஜெயப்பிரகாஷ் குழந்தைகளை அப்பதான் போட்டோட இன்னொரு பக்கம் கூட்டிப்போனார். படகு வேகமா போயி லெப்ட்ல லேசா திரும்புச்சு. படகு சாயுற மாதிரி இருந்துச்சு. ஏய்… கவுறப்போகுதேனு கத்திக்கிட்டே அந்த டிரைவர் தண்ணிக்குள்ள குதிச்சுட்டான். எனக்கு ஒண்ணும் புரியலை. வேகமா எந்திரிச்சு ஸ்டேரிங்கை கெட்டியாப் புடிச்சேன்… முடியலை… படகு திடீர்னு தலைகுப்புற கவுந்திருச்சு. செத்தம்னு தான் நெனைச்சேன். கொஞ்ச நேரத்துல ஃப்ரன்ட் கண்ணாடியை உடைச்சு என் னை இழுத்து வேற படகுல போட்டாங்க. அந்தக் கண்ணாடி குத்திடுச்சு.

பயணிகள் எல்லாரும் ஒரே பக்க மாகப்போய் நின்னதாலதான் பாரம் தாங்காம கவுந்ததா சொல்றாங்க. திடீர்னு ஸ்டேரிங்கை திருப்பினான். படகு ஒருமாதிரி சாய்ற மாதிரி திரும்புச்சு… போட் கவுறப்போகுதுன்னு சொல்லிக்கிட்டே சீட்ல இருந்து தண்ணிக்குள்ள டிரைவர் குதிச்சிட்டான். என் குழந்தை கள், எங்க மூத்தார் குடும்பம், என் அண்ணன் குழந்தைகள் மொத்தம் 9 பேரும் அய்யோ… அய்யோ… சுருளி அருவியைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிப் போயிருந்தா எங்க வாரிசுகள் பிழைச்சிருப்பாங்களே…” -திரும்பத் திரும்ப சொல்லி கட்டட காண்ட்ராக்டர் ரவியின் மனைவி சரஸ்வதி கதறிய கதறல் இன்னும் நம் இதயத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையின் ஏந்தல் பகுதி. இதுதான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி லேக். இங்குதான்… 30.9.09 புதன் மாலை 5.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற ஜலகன்யகா என்ற பைபர் கிளாஸ் இரண்டடுக்கு படகு கவிழ்ந்து, சுமார் 80 பேரை சாகடித்த கோரவிபத்து நடந்திருக்கிறது.

பயணிகள் பலரை காப்பாற்றிய பயணிகளின் லோடுமேன் கண்ணன், ஜட்டியோடு தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றார்.

“குமுளி கடை வீதியில நின்னுட்டிருந்தேன். படகு கவுந்திருச்சு, நீச்சல் தெரிஞ்சவங்க ஓடிவாங்க வாங்கனு கத்துனாங்க. படகுக் கண்ணாடிகளை உடைச்சுதான் பலரை காப்பாத்தினோம். படகுல ஒரு மூலையில ரெண்டு குழந்தைங்க… கட்டிப்புடிச்சபடி பிணமா படு பயங்கரம்ங்க…” -கண்கலங்கினார் இளைஞர் கண்ணன்.

“50 வருஷமா ஒரு விபத்தும் நடந்ததே இல்லையே…” -புலம்பிக்கொண்டிருந்த தேக்கடி படகுத்துறை ஊழியர் களிடம் கவிழ்ந்த படகு பற்றி கேட்டோம்.

“மற்ற 10 படகும் இரும்புப்பலகையி லான படகுகள். கவுறவே கவுறாது. அதோட மாடியெல்லாம் ஓப்பனா இருக்கும். ஸ்ட்ராங்க்கா இருக்கும். இது ஒண்ணு தான் ஃபைபர் பிளாஸ்டிக் போட். சென்னையில் நர்கீஸ் கம்பெனியில 80 லட்சத்துக்கு வாங்கினார்கள். புத்தம் புது போட். ஆகஸ்ட் 17 அன்னைக்குதான் லேக்கில் ஓட விட்டாங்க. ஃபர்ஸ்ட்லேயே கம்ப்ளைண்ட்தான். பேலன்ஸ் இல்லாம இப்படி அப்படி சாயுதுன்னு கம்ப்ளைண்ட்ஸ். அதிகாரிகள் கண்டுக்கலை. இந்தப் படகு எல்லாம் மீன்பிடிக்க மட்டும்தான் பயன் படுத்தணும். கமிஷன் கிடைக்குதேன்னு 80 லட்சம் கொடுத்து வாங்கிட்டு வந்து 80 பேரை கொன்னுட்டாங்க. ஜாலியாக படகில் சவாரி செய்துகொண்டே, ஏரியை ஒட்டிய சரணாலயத்தில் வன விலங்கு களைக் கண்டு ரசிப்பதற்காக தினமும் சராசரியாக ஆயிரம் சுற்றுலா பயணி கள் தேக்கடிக்கு வருகிறார்கள்.

படகின் கீழ்த்தளத்திற்கு 100 ரூபாயும், மேல்தளத்திற்கு 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் இல்லை. கவிழ்ந்த படகில் 75 சீட்டுகள்தான். எக்ஸ்ட்ரா நாற்காலிகளைப் போட்டு 83 டிக்கெட் கொடுத்திருக் கிறார்கள். 20-க்கும் அதிகமான குழந்தைகள் பயணித்திருக்கிறார்கள்” என்றனர்.

“கேரள சுற்றுலாத்துறை வருடத்திற்கு வரும் 120 கோடி வருமானத்தை மட்டும்தான் பார்க்கிறது. இவ்வளவு பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் டில் தீயணைப்பு நிலையமோ, மீட்புக்குழுவோ ஏற்படுத்தவில்லை. எந்தப் படகுக்கும் கண்டக்ட ரும் இல்லை” -வேதனையைக் கொட்டினார் குமுளி ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சுப்ப ராயலு. தேக்கடி படகு விபத்து பற்றி அறிந்ததும் பதட்டத்தோடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப்ஸை தொடர்புகொண்ட கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி “”நம்ம மலையாளிகள் யாராகிலும் இறந்தார் களோ…?” என்று கேட்டார்.

“இல்லை… இல்லவே இல்லை” என்றதும் நிம்மதியாக போனை கட் செய்தார்.

மலையாள தொலைக்காட்சிகள் கூட, “”நம்ம மலையாளிகள் யாரும் மரிக்கவில்லை. 13 வருடம் முன்பு கும்பகோணத்துக்கு போய்விட்ட 3 மலையாளிகள் படகு விபத்தில் இறந்திருக் கிறார்கள். அவர்கள் “முழுக்க” மலையாளிகள் இல்லை” என்று ஃபிளாஷ் நியூஸ் ஓட்டிக் கொண்டிருந்தன.
இது என்னடா தேசம்!

(மூலம்:தெரியவில்லை)
இது திராவிடம் பேசும் திராவிட சிகாமணிகளுக்கு புரிந்தால் சரி…

ஒக்ரோபர் 6, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக