புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

தமிழனின் சொரணையும், புதுடெல்லி ஏகாதிபத்தியதிற்கான அவன் விசுவாசமும்

election

தமிழர்களுக்கு எதிரான இனபடுகொலைகளின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன ‘இந்தி்’ய அரசு ஐ.நா மன்றத்தில்,மனித உரிமை வாக்கெடுப்பில்.. இலங்கையில் ஒரு சாவும் விழவில்லை..என சிங்கள தூதுவரை கட்டிபிடித்து இந்திய தூதுவர் முத்தம் கொடுத்து கொண்டது ஏன்? இந்தி அரசின் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்சி செய்பவர்கள் தமிழர்களின் இன எதிரிகளே!.பாக்கு நீரிணையின் அந்த பக்கம் இருந்தால் என்ன? இந்த பக்கம் இருந்தால் என்ன? தமிழினமே எதிரி என்று இந்தி அரசு செயல்படுகிறது!!

வட்டியில்லாமல் இலங்கை இராணுவத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் உதவியளிக்கிறதே! விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்கிற சாக்கில் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க எண்ணுகிறது இலங்கை. அந்த நாட்டிற்கு ‘இராடார்’ கருவி, கருவிப்பயிற்சி, ‘தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பிவைப்பது என உதவிகளை இந்தியா வாரி வழங்குவது ஏன்? தமிழர்கள் இந்திய அரசின் எதிரிகளாவர்! எவன் ஒருவன் தன்மீது திருப்பி தாக்க மாட்டான் என தெரிந்து கொண்டே அவன் மீது தாக்குதல் நடத்துவதுதான் உலகின் மிகபெரிய வன்முறையாகும்.. இது திருப்பிதாக்க தெரியாத 5 வயது பாலகனை மிதிப்பது போன்றதாகும் உலகத்தில் எந்த நாட்டு அரசினாலும் தட்டி கேட்க இயலாத நாதியற்ற தமிழினத்தின் மீது திட்டமிட்டு தனது கொடுரங்களை
தொடர்கிறது

உகாண்டா நாட்டில் சர்க்கரை ஆலை ஒன்றை கட்டுவதற்கு குசராத்தை சார்ந்தவர்கள் முயன்ற போது, சொந்த நாட்டின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த உகாண்டா மக்கள் ஒரு குசராத் சேட்டை கொன்றனர். என்ன நடந்தது? பா.ச.க அத்வானி ஓடிச் சென்று நேரடியாக வெளியுறவு அமைச்சகத்துக்கே சென்று இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உகாண்டாவின் இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக மீனவர்கள் இங்கு சிங்கள் வெறியநாய்களின் வேட்டைக்கு ஆளாகி செத்துக் கொண்டிருக்கும் ”தமிழின”த் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு அவர்கள் போடும் பணம்,பதவிக்கு பல்லக்குத் தூக்கி தமிழினத்தை M.P சீட்டுகளாக விற்று பிழைப்பு நடத்தக்கூடிய திராவிட, தேசிய கட்சிகளின் போலி முகங்களை தமிழக மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.உலகச்சாதனை எனக்கூறக்கூடிய அளவில் அறுபது ஐரத்திற்கு (கிலோமீட்டர்) மனிதச்சங்கிலி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்கள், சட்டமன்றத்தில் தீர்மானம், திரைத்துறைப் போராட்டம், வணிகர் போராட்டம், உண்ணாநிலை என காந்திய வழியில் அனைத்துப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். அதன்பின்னும் இலங்கை அதிபர் ‘போரைத் தொடர்வோம்’ என மன்மோகன்சிங்கைச் சந்தித்தபிறகு புதுதில்லியிலேயே அறிவிக்கிறார்.

”நீங்க திட்டுங்க.. அறிக்கை விடுங்க.. எங்கையாவது போய் போராட்டம் கூட பண்ணுங்க.. நாங்க ஆயுதம் கொடுத்துண்டு தான் இருப்போம்” என்று செயல்படும் மத்திய அரசிடம் தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் பதவி அரசியல் செய்து ஈழத்தமிழர்களை ஒழிக்க நினைக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக துணை போகின்றன. அங்கு சிந்தப்படுவது தமிழனின் குருதி என்பதை இவர்கள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை. இங்கிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தை தடுக்க யோக்கியதை இல்லாத மத்திய கப்பற்படையும் தமிழக அரசும் வாய்ச்சவடால் பேசியே காலம் ஓட்டுவதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிடும் என எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் டீலர்கள் அந்த கடிதத்தால் என்ன நடந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா? அதை இந்திகாரன் ஆகா வந்துடுச்சுடா பேப்பர் என்று மிளகாய் பஜ்ஜியை வைத்து சாப்பிட்டு தூக்கி கடாசியிறுப்பான்!

இவ்வளவு நடந்த பின்னரும் இளிச்சவாய் தமிழர்களான நாம் ஓட்டுப்போட்டு புதுடில்லி ஏகாதிபதியத்திற்கு விசுவாசத்தை காட்டி வெற்றி பெற வைக்கப்போவது உறுதி!.நமக்கு என்ன பிரச்சனை நாம அடுத்த நாள் சோறு பொங்கனும் சீரியல் பாக்கணும்.. அடுத்து அசினு,நயந்தாரா என்று கனவு காணணும்.. மக்களுக்கு இல்லாத ரோசம் தலைவர்களுக்கு மட்டும் வந்துவிடுமா என்ன? காலம் பதில் சொல்லும் என நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்…. தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் தாம் தமிழினத்தின் சாபமும் சோகமும்.. மக்கள் இதனை புரிந்து கொள்ளாதவரை தமிழனை கடலில் மட்டுமல்ல நம் வீட்டுகே வந்து கூட சுட்டுவிட்டு போவான் சிங்களன்.. தமிழா இன உணர்வு கொள்! அது தெரியவில்லையென்றால் ஒரு சீக்கிய இனத்தை பார்த்து மாராத்தியனை பார்த்து
இவ்வளவு ஏன் உன்னை வருடம் முழுவதும் ஏதாவது காரணம் சொல்லி அடிக்கும் கன்னடனை பார்த்து கற்று கொள்!

Advertisements

திசெம்பர் 18, 2008 - Posted by | Uncategorized | ,

5 பின்னூட்டங்கள் »

 1. Dear dir,

  Your brought that the matter this is correct.

  பின்னூட்டம் by MU.MU.KA.MARIDURAI | திசெம்பர் 19, 2008 | மறுமொழி

 2. I think Tamil Nadu people must realise the gravity of oppression we Tamils are undergoing from Delhi govenments, due to the self interested Tamil Nadu politicians. This must change otherwise Tamils are going to face tremondus oppression by the Delhi Governments. This is evidenced by the way are handeling the Sri Lankan Tamils issues. Earlier, during Norway’s involvement in the Sri Lankan conflict, brought a lot of positive approaches and the Tamils were able to set up their own administration and the peace initiatives brought a lot of hope for the indefinet peace there. On contary India is causing a lot of damage to the Tamil peoples in Sri Lanka by supporting the chauvanistic Singalan government.

  பின்னூட்டம் by Tamilove | திசெம்பர் 19, 2008 | மறுமொழி

 3. arumaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaai

  பின்னூட்டம் by suresh | திசெம்பர் 19, 2008 | மறுமொழி

 4. i totally dis agree with this artical.this is against our country’s integretion.sorry brother.we are tamils but we canot fight for you.what happen in malaysia?whereever in the world,tamils get suffer.ya its sad one.tamilnadu tamils first ofall they canot get the cavery water.leave it cavery ,periyar dam water?it is shame on central government.
  karnataka govt didnot follow the supreme court order!!!!.where we go UN.????so somany problem in our place people frastrating about demacracy.like this time you are writing like this??? NO NO we want peace through demacracy.
  caste leaders,pro ltte leaders,fanatics about religion no no like that leader no need to tamilnadu.so please don’t put seed on our people.if jammu and kasmir pak support that people?we cannot accept then how we accept in srilanka.no

  பின்னூட்டம் by rasu | திசெம்பர் 20, 2008 | மறுமொழி

 5. நண்பரே,
  திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பல தமிழின ஆர்வலர்களும் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக மத்திய அரசு தலையிட வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு தனது பிராந்திய வல்லாதிக்க நோக்கத்திற்காக சிங்கள அரசுக்கு உதவி செய்வதும் ஆதரவாக இருப்பதையும் காண மறுக்கிறார்கள்.இந்திய முதலாளிகளின் நலனுக்காக இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் இச்செயலை தமிழக மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

  நட்புடன்
  வினவு.

  பின்னூட்டம் by வினவு | திசெம்பர் 23, 2008 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: