புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

மவுண் ரோடு மகாவிஷ்ணுவின் பயிறு இறையும் நாள் என்னாளோ?

சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் ‘இந்தி’யத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய ‘இந்தி’யத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் ‘இந்து’ உள்ளிட்ட ஆரிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர்
இந்து பத்திரிகையை பொறுத்தளவில் கல் எங்கே பட்டாலும் காலைத் தூக்கும் பிராணி போல தமிழ்நாட்டில் எது நடந்தாலும் விடுதலை புலிகளை அதோடு வலிந்து இணைத்து பழி சுமத்தும் பத்திரிகையை என்பது எல்லோரும் அறிந்ததே.

சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், “புலிகள் 100 பேர் பலி – 200 பேர் பலி” என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் ஆரிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன. இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் ஆரிய “இந்து” இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், தமிழ்நாட்டில் தமிழர்கள் வீணாக ஈழ தமிழர்களுக்காக போராடுகிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு மாலினி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில்,தமிழன் சோற்றில், சென்னை – மவுண் ரோட்டில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் “லங்கரத்னா” விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் – ஆரியனுக்கு எதிரி தேசம்” – என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து – ராம்களால் தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

காசுமீர்,நாகலாந்து,இவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மும்பை குண்டுவெடிப்பை கூட கண்டித்து தலையங்கம் தீட்ட வேண்டியதுதானே? பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள்! போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே!.இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே வீடு தேடி வந்து கொட்டை பயிறுகள் இறைக்கபட்டு விடும்

தமிழர்,தமிழ்நாடு விவகாரம் என்றால் துள்ளி கொண்டு தலையங்கம் தீட்டுவது ஏன்? தமிழன் இளிச்சவாயன் ..எருமை மாடுகளோடு யாருக்கு உணர்வு அதிகம் என்று சவால் விடுபவன்.. இன்னைய நிலையில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைபட்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டு உள்ள தமிழனை ஒற்றுமை படுத்தி தமிழ் இன உணர்வை ஊட்டுவதே இன்று தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு உள்ள கடமையாகும்..
என்றாவது ஒரு நாள் தமிழன் விழித்தேழும் போது தின ம..,ராம் கம்பனிகளின் பயிறுகளும் இறைக்கபடும்

Advertisements

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | 1 பின்னூட்டம்

‘இந்தி’அரசின் அண்ட புளுகும் அதன் அடிவருடும் ஆரிய ஊடகங்களும்

கச்சத் தீவுக்கு அருகில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்ளதாக சொல்ல முடியாது – மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது

-கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தபட போவதில்லை-‘இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன்

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த “சாஸ்திரி”, பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் ‘இந்தி’யாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.
இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் ‘இந்தி’ய அரசு தயங்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு ‘இந்தி’யா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான ‘இந்தி’யாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது.துப்பாக்கி சுடும் போர்பயிற்சியை பழகுகிறது ‘இந்தி’யக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை.ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 400ல் ஒருவருக்குக்கூட ‘இந்தி’ய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை..

தமிழ்நாடு ‘இந்தி’யாவில்தான் இருக்கிறதா? என்று கருதவேண்டியுள்ளது.சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய ‘இந்தி’ய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது.சர்வதேச கடல் எல்லையை குசராத், மகாராட்டிர மீனவர்கள் தாண்டும்போது, பாகிஸ்தான் அந்த மீனவர்களை சுட்டுத்தள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் ‘இந்தி’யாவிடம் ஒப்படைத்தது.கடந்த சார்க் மாநாட்டின் போது கொழும்பில் வைத்து ‘இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் எனைய அதிகாரிகள் பூட்டிய அறைக்குள் சிங்கள அதிபன் ராசபக்சே யுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதில் வழங்க பட்ட உறுதிமொழி கடலில் உங்கள் ஆளுமையை நிலை நிறுத்திக்கொள்ள தேவையேற்பட்டால் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்காதீர்கள்! என்று இனவாத சிங்கள அரசுக்கு இந்திய மத்திய அரசு இரகசிய சைகை காட்டி விட்டது என்றே நினைக்கவேண்டியுள்ளது

தமிழ்நாட்டில் ராய்ட்டர்ஸ், பி.ரி.ஐ., யு.என்.ஐ. போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை அப்படியே போட்டு வந்தவர்கள் இப்போது சிறிலங்கா துணைத் தூதுவராக இருக்கின்ற அம்சா போடுக்கின்ற எலும்புதுண்டுகளுக்காக இலங்கைக்கு ஆதரவான செய்திகளைத்தான் போடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்க வேண்டியவர்கள் எட்டப்பனின் ஐந்தாம் படைகளாக இருக்கிறார்கள். அப்படியான ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகளை நாம் செய்ய வேண்டும்.

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யார் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தமிழா

தம்மை ஆரியர்கள் எனவும், சமக்கிருதம் தமது மொழி எனவும் ஆரியசமாஜங்கள், ஆரிய கழகங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு தம்மை உயர்ந்த ஆரியர்கள் எனவும் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இணையத்தளங்களில் உலாவும் போது மட்டும் தமிழ் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, ஆரியப்படையெடுப்பு உண்மையில்லை, அதற்கான ஆதாரமெதுவுமில்லையென்றும் கூட பதிவுகள் செய்வதைப் பார்க்கும் போது அவர்களின் பச்சோந்தித் தனம் மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை அதேவேளையில் மீசைக்கும் ஆசைப்படும் அவர்களைப் பார்க்க அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகிறது.

அந்தளவுடன் நிறுத்தி விடுகிறார்களா?, இல்லை. ஆரியப் படையெடுப்பு என்பது கிடையாது ஆனால் நாங்கள் ஆரியர்கள், நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, இந்தியாவைச் சேர்ந்தவ்ர்கள் தான் ஆனால் ஆரியர்களாகிய எங்களிடமிருந்து தான் தமிழர்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்களுக்கு அதிகப் பிரியம். அதனால் ஈழத்தமிழர்களையும் இளிச்ச வாயர்களாக நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமது ஆரிய பிராமண மேலாதிக்கத்தை, அறிமுகமேயில்லாதவர்களின் கட்டுரைகளினாலும், இணைப்புக்களின் மூலமும் ‘நிரூபிக்கப்’ பாடுபடும், பல பார்ப்பனப் பரதேசிகள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்குக் குழிபறிக்கும் போது, தமிழர்களுக்கு விடிவு காலமேற்படுமா?

தமிழினம் இன்று சிங்களவர்களால் படும் நெருக்கடியை விட, தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களுக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்களின் நெருக்கடி பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. சிங்களவர்களின் நேரடி எதிர்ப்பை முகம் கொள்வதை விட, பார்ப்பனர்களின் மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்வது தமிழினத்துக்கு என்றும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் யாவரும் கட்சி வேறுபாடின்றி இலங்கை சனாதிபதியைச் சந்திக்க மறுத்து ஈழத்தமிழர்களுக்காக தமது சகோதரத்துவத்தைக் காட்டிய போது, தமிழர்களின் முகத்திலறைந்து விட்டு, இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது மட்டுமல்ல, தனது வீட்டுக்கும் அழைத்து விருந்து வைத்தது யார்? வேறு யாருமல்ல, அதுவும் தமிழ் பேசும் பார்ப்பான் தான்.

ஈழத்தமிழினம் படுகொலை செய்யப்படும் போது, ஈழத்தமிழினம் அழிக்கப்படும் போது அதற்குத் துணைபோய், இலங்கை அரசுடன், இந்திய அரசுக்குத் தெரியாமலே பாதுகாப்புக்குழு அமைத்துத் தமிழர்களை அழிக்கச் சதி செய்வது வேறு யாருமல்ல, அதுவும் ஒரு பார்ப்பான் தான்.

ஈழவிடுதலையைக் கொச்சைப் படுத்தி, பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிச் சிங்களவர்களுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களும் பார்ப்பனர்கள் தாம்.

உண்மையிலேயே எப்படித்தான் தமிழைப் பேசித் தமிழால், தமிழர்களின் தயவில் வாழ்ந்தாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதேயில்லை. இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழர்களுடன், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, அவர்களை ஆதரித்த, இன மக்களுக்கெதிராக இயங்கும், உலகின் முதலாவது மனிதக்குழு பார்ப்பனர்களாகத் தானிருக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகையின் “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வரிகளைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.

பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள், சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்பதாகும், அவர்களின் முன்னோர்கள் ஆரியவர்த்தாவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தான் பார்ப்பனத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இணையத்தளங்களும், மனுச்மிருதியும் கூறுகின்றன். அதனால் தான் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாக இருந்த இந்த இணையத் தளத்திலேயே “ஆரிய” பார்ப்பனர்கள் நாசூக்காக தமது ஆரிய மேலாதிக்கத்தையும், சங்கத்தமிழில் கூட ஆரியர்களைப் பற்றிக் கூறப்பட்ட்டுள்ளது என ஆரம்பித்து, சங்கத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஆரியர்கள் தான் என நிரூபிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள் போலிருக்கிறது. சங்கத்தமிழில் ஆரியர்கள் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது, அதனால் வந்தேறி ஆரியர்களுக்கும் சங்கத்தமிழுக்கும் தொடர்பு என்றோ அல்லது ஆரியர்களிடமிருந்து தான் சங்கத்தமிழ்ப் பாடல்கள் உருவாகின என்றாகி விடுமா.

தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனித்துவமான மொழி, கலாச்சார அடையாளங்களைக் குலைத்துக் கொச்சைப்படுத்தி, அவற்றைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாக அல்லது தமிழர்களின் தனித்துவமான இணையற்ற் மொழி, கலாச்சார, இலக்கியங்களில் ஆரியக்கலப்பிருப்பதாக இணைய்த்தளங்களில் ‘நிரூபிக்க’ பார்ப்பன பிரியர்கள் பலர் கிளம்பியிருப்பதை நாம் காணலாம். ஆனால் பார்ப்பனப் பிரியர்கள் என்னதான் இங்கு தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பித்தாலும், தமிழர்களின் அறிவு, கலை, கட்டிட, தொழிநுட்பத்துக்குள் வந்தேறி ஆரியர்களையும் நுழைத்துப் பங்கு கேட்டுத் தமிழர்களையும், தமிழையும் தாழ்மைப்படுத்த முனைந்தாலும் தமிழர்கள் வந்தேறி ஆரியர்களை நம்மவர்களாகவே எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. வடக்கர்களை தம்மிலிருந்து விலக்கித் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்களின் வரலாற்றில் போதியளவு ஆதாரங்களுண்டு.

கிறித்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுத் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றில் ஒரு இளந்தமிழ்ப் பெண் கூறுகிறாளாம் ” எப்படிச் சோழர்கள் ஆரியர்களை வல்லத்தில் நொருக்கினார்களோ அப்படி என்னுடைய வளையல்களை நொருக்குகிறேன் பார்” என்று.(யாராவது தெரிந்தவர்கள் அந்தப் பாடலைத் தரவும்)

அது மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் பழித்தார்கள் என்பதற்காகப் படையெடுத்துப் போய் ஆரிய வடக்கர்களை கல் சுமக்கச் செய்து, தமிழ்த்தாய்க்குச் சிலையெடுத்ததும், கங்கை வரை படையெடுத்து, வடக்கர்களைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த வரலாறும், எமது முன்னோர்கள் ஆரியர்களை எதிரிகளாகத் தான் கருதினார்கள் என்பதற்காகச் சான்றாக எம்மிடமுண்டு.

அதனால் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் என்ன தான் ஆரியக் கூத்தாடினாலும். ஏமாந்து போகாமல், அவர்களின் கோமாளிக் கூத்தை மட்டும் இரசித்து விட்டுக் காரியத்தில் கண்ணாக, விழிப்புடன் இருக்க வேண்டியது தான் உலகத்தமிழர்களின் கடமையாகும்.

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | 3 பின்னூட்டங்கள்

வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது.

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | 5 பின்னூட்டங்கள்