புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

ஆரியன் சிங்களவனின் பங்காளி

    சில செய்திகள் கூறும் உண்மையும்–புரிந்தும் நடிக்கும் பொறம்போக்குகளின் அரசியலும்

1. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.(அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்)

—-மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு

2.நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை .எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது
—-காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி(அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)

ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய ‘இந்தி’யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!
நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது?நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் ‘இந்தி’ அரசுதானே? சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன!தமிழனின் சொரனை எங்கே போனது?

உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவை படுக்கிறார் ,பாகிஷ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவை படுகிறார்கள்,கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!

ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த ‘இந்தி’யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். ‘இந்தி’யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்’சிங்கு’ தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?ஆரியன் சிங்களவனின் பங்காளி! 6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்?சுடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!

Advertisements

நவம்பர் 22, 2008 - Posted by | Uncategorized |

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: