புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!

buf

எருமை மாட்டின் சொரணைக்கு சவால் விடும் நமது வியாதிகள் ராசபக்சே வீட்டில் பிரியாணி தின்ன தயாராகி வருகிறார்கள்..இதில் கூத்து என்னவென்றால் இவ்வளவு நாட்கள் அங்கே தமிழினம் முட்கம்பி வேலிகளுக்குள் சிக்குண்டு இருப்பது தெரியாதா? இப்போதுதான் இவர்களுடைய பூனைக்கண் திறந்ததா? கூர்ந்து கவனித்தால் தமிழர்களுக்கு ஒன்று புலப்படும்.. அமெரிக்கா பிரிட்டன் உட்பட மே மாத பேரவலத்தினை தடுத்து நிறுத்த முயன்ற போது அதை குறுக்குசால் ஓட்டி கெடுத்தது யார்? என்பது நன்றாகவே தெரியும்.இப்போதும் அதே நோக்கத்தில் தான் இந்த பிரியாணி தின்னும் நிகழ்வு நடைபெற போகிறது..

briyani

அங்கே மேற்குலகம் முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை விடுதலை செய்..அங்கே மனிததிற்கான அடிப்படை உரிமைகள் துளி கூட இல்லை.. gsp+ வரிசலுகையை நிறுத்துவோம் என மிரட்டிகொண்டிருக்கும் போது.. தனது சக ஆரிய பங்காளி துன்புறுவதை இந்தி யா பார்த்து கொண்டு இருக்குமா? நம் கையை கொண்டே நமது கை குத்தும் வஞ்சகத்தினை நாசுக்காக நீண்ட நாட்களாக இந்தி யா செய்து கொண்டுள்ளது அதில் முதலில் பலியாவது பதவிசுகத்திற்கு அலையும் அரசியல் பதர்கள்..

ஏற்கனவே ஈழ பிரச்சனைக்காக தெரு முக்கில்
கத்திவிட்டு போகும் இந்த வியாதிகளை உண்மையானவர்கள் என இளித்தவாய் தமிழர்கள் நம்பி இருக்கும் வரை இவர்கள் கூறுவதுதானே உண்மை.. டில்லிகாரனுக்கு தலையையும் தமிழ்நாட்டுக்கு வாலையும் காட்டும்
இவர்கள் போய் வந்து என்ன அறிக்கைவிடுவார்கள் என்பது நாம் அறிந்ததே! அது கொலையாளிகள் மேனன் மற்றும் நாராயணன் கொடுக்கும் அறிக்கையின் மீள்பதிவாகவே இருக்கும்! சக தமிழினத்தவரே சொல்லிவிட்டார்கள் அகதி முகாம்கள் நன்றாக உள்ளது என நீர் என்னயா சொல்வது என மேற்குலத்தின் வாயை அடைக்க போகிறார்கள்..

நாம் இங்கு எழுதுவது முட்கம்பிகளுக்குள் இருக்கும் தமிழர்களுக்கு தெரியாது எனினும் நம்முடைய வேண்டுகோள் ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை போன்று அங்கு வரும் எங்கள் வியாதிகளை கல்லால் அடித்து விரட்டுங்கள்.. ஆமை புகுந்த கிணறும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள் ..இவர்களை பொறுத்தவரை இது சரியே!

அக்டோபர் 9, 2009 - Posted by | Uncategorized

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.