புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

இது தாண்டா தமிழக(சிங்கள) காங்கிரசு!

1. வாசன் குருப் – பாபநாசம் பண்ணையார் சொந்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்… இந்த பண்ணையாரின் அடிபொடிகள்… சுதர்சனம், ராணி, டாக்டர் ஜெயகுமார், பழனியாண்டி… காங்கிரசில் இருக்கும் கோஷ்டிகளில் பலம் பெற்றது… இந்த பண்ணையார் கோஷ்டிதான்…யார் டெல்லி மேலிடத்தில் இருந்து வந்தாலும் சந்திப்பது இந்த கோஷ்டியைத்தான்..

2. கிருஷ்ணசாமி குருப் – இவரது கோஷ்டியில் இவரும் கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது என்ற பேமானி பேச்சு இவரது மகன் விஷ்னுபிரசாத் மட்டும்தான்… துணைக்கு மருமகன் அன்புமணி, ஒவ்வோரு தேர்தலிலும் குரங்குக்கு சவால் விடும் மருத்துவர் ராமதாஸ்

3. இளங்கோவன் குருப் – இவரது கோஷ்டியிலும் இவரும் இவரது மகன் திருமகன் மட்டும்தான் இருப்பார்கள்.அசல் கன்னடரான இவர் தமிழுக்கு ஏன் செம்மொழி?என வழக்கு போட துணிந்தவர்.. தமிழர்களுக்கு எதிரான இவரது சேவை தொடர்ந்து கொண்டே உள்ளது!

4. குமரி அனந்தன் – இவர் தனி’பனை’மரம்…பனைவாரிய தலைவர் இங்கு இனிமேல் குப்பை கொட்ட முடியாது என்று இவர் மகளை பாஜகவிற்கு அனுப்பி விட்டார்… அங்கு அவர் மகள் தமிழிசை மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு சென்று வருகிறார்…

5. செல்லகுமார் – இவரும் தனிமரம்…

6. மணிசங்கரய்யர் – இவரது கோஷ்டியில் இவரும்… இவரது கைத்தடியான ராஜ்குமார் மாயவரம் எம்.எல்.ஏ.வும்தான்… இவருக்கு ஓட்டு போட மட்டும்தான் மயிலாடுதுறை தொகுதி மக்கள் தேவை… இவருக்கு வேண்டியவர் சிங்கள தலைவர் ராஜபக்சே… வேண்டியவர்கள் சிங்கள மக்கள்… ராஜ பக்சே இவரது வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சாந்தி முகூர்த்தம் வரை எல்லா வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டுதான் கொழும்பு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..கூடுதல் தகுதி ‘ஐயர்’….

7. சிதம்பரம் – இவரது கோஷ்டியில் இவர்… இவரது ம்கன் கார்த்தி. ராகுல் காந்தி மூலமாக இளைஞர் அணி தலைவராக அடி போடுவதாக பேச்சு உலவுகிறது.. மற்றும் கைத்தடி காரைக்குடி எம்.எல்.ஏ. சுந்தரம்…

8. கிருஷ்ணசாமி வாண்டையார் – இவர் தஞ்சை காங்கிரஸின் குறுநில மன்னர்… கள்ளர் சாதிக்காரர்களின் இளவல் – பாபநாசம் பண்ணையார் மூப்பனார்களுக்கு பரம எதிரி – துணை அதிமுகவில் உள்ள 40 நாள் மந்திரியாக இருந்த இவரது சித்தப்பா அய்யாறு வாண்டையார்…

9. வசந்தக்குமார் – சோனியாவிற்கு நெருக்கமானவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஏஜெண்ட்… பொருட்களுக்கு… தனிமரம்…

10. ஜெயந்தி நடராஜன் – தனிமரம்… காசு கொடுத்து தனக்கு தானே போஸ்டர் அடித்து கொள்வார்…

11. டி.யசோதா – திருபெரும்புதூர் எம்.எல்.ஏ. – சொந்த கட்சியை விட ஜெவுக்கு விசுவாசம் அதிகம்…துணைக்கு போளூர் எம்.எல்.ஏ வரதன்

12. ஆர்.பிரபு – தனிமரம்… நீலகிரியின் ரோஜா என ஊட்டியில் போஸ்டர் அடித்துக் கொள்வார்…

13. பிட்டர் அல்போன்ஸ் – தனிமரம் – காங்கிரஸிலே கொஞ்சம் பேச தெரிந்த நாகரீகமானவர்… சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் இவரை… வாசன் குருப் நைய புடைத்த போது கேட்க ஆளில்லை… சட்ட மன்றத்தில் ஜெவை குறை கூறியதற்கு… 1995இல் தாமரைகனியால் தாக்கப் பட்டார்… நிறைய அடிவாங்கியவர்…. காங்கிரஸ் என்றாலே என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிடாங்க என்று வடிவேல் போல அடிவாங்குபவர் என நிரூபிப்பவர்…

14. வேலூர் ஞானசேகரன் கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா..என சிங்கள தூதர் அம்சாவினால் பாராட்ட பெற்றவர்..மேலும் அவர் கொடுக்கும் விருந்தில் அவ்வப்போது கலந்து கொண்டு சிறப்பிப்பவர்..துணைக்கு சித்தன்..ராமநாதபுரம் எம்.எல் ஏ அசன் அலி..இதில் அசன் அலி ராமேசுவரத்திற்கு உயிரை பணையம் வைத்து வந்த ஈழ தமிழர்களிடம் “உங்களுக்கு அங்க என்ன பிரச்சனை?இங்கு வந்து ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள் திரும்பி போங்கள் என கத்திய பெருமைக்குரியவர்.. தற்போது இந்த கோஷ்டி இலங்கையில் போரை நிறுத்த வேண்டாம் தொடரவேண்டும் பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறபடுகிறது

15. திருநெல்வேலி எம்.பி. ஆதித்தன் – சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால்… கோஷ்டி தெரியவில்லை…

16. அன்பரசு – இவரது கோஷ்டியில் இவரும்… இவர் மகன் சோளிங்கர் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு… ஜெவின் உண்மை தொண்டர்… சிறப்பு தகுதி… சிங்களர்களிடம் இருந்து… விஜயரத்னே விருது பொறுக்கி வந்த பொறுக்கி…

17. வாழ்ப்பாடி ராமமூர்த்தி மகன் சுகந்தன் – இவர் பாஜ்கவில் இருந்து தாவி வந்தவர்… அவ்வப்போது குரங்கு போல் தாவி கொண்டிருப்பார்…

18. எஸ்.ஜி.வினாயகமூர்த்தி – முன்னாள் எம்.எல்.ஏ. எழில் காத்த நாயகியே என ஜெவை புகழ்ந்தவர்…

19. சுதர்சன நாச்சியப்பன் – இவரும் தனி மரம்… தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டி கொள்வார்…

20. தங்கபாலு – 1960 களிலேயே வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பேர்வழி… அமெரிக்காவில் இருக்கும் இவரது தம்பியை வைத்துதான் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு ஜெ பெயரை வைக்க ஏற்பாடு செய்த ஜெ விசுவாசி… கூடுதல் தகுதி முன்னாள் ரவுடி… மாநில தலைவர்…தெலுங்கு வந்தேறி..பச்சை தமிழர்களை பார்த்து தமிழின துரோகி என்பார்..சமீபத்தில் விபச்சார புரோக்கர் சோனாவின் திருவாயால் ரெகுலர் கஷ்டமர் என புகழப்பட்டவர்

21.அடைகலராஜ் மூப்ஸ் கோஷ்டியில் இருந்த ஆள்… இந்தியன் வங்கியில் பல கோடி… மூப்ஸ் ஆதரவோடு கடன் வாங்கி… ஏமாற்றிய பேர்வழி… இப்போது இருக்கிறாரா என தெரியவில்லை…

இவரது தங்கை எமிலி திருச்சி முன்னாள் மேயர்… இவரது சகோதரி மகன் ஜெரோம் கடந்த தேர்தலில் திருவரங்கத்தில் தோல்வி அடைந்தவர்… இப்போது வாசன் கோஷ்டியில் உள்ளார்கள்…பெப்ஸி மார்க்கெட்டிங்கில் பார்ட்னர்..மேட்டுபாளையத்தில் உள்ள ப்ளாக் தண்டர் கூட அடைக்கலராஜுக்கு சொந்தமானதுதான்…

22. ஜெயலலிதா – இவர் தமிழ் நாடு காங்கிரஸில் இல்லாவிட்டாலும்… உண்மையில் இவருக்குதான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் விசுவாசிகள் அதிகம்… அன்பரசு போன்றவர்கள்… இவர் சொந்த கட்சிகாரர்களை விட இவருக்குதான் சேவை செய்வார்கள்… மேலும் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்களின் தலைவரும் இவரே…

ஏதோ எனக்கு தெரிந்த காங்கிரஸ் கோஷ்டிகளை பற்றி சொல்கிறேன்… மற்றபடி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களை விட கோஷ்டிகள் அதிகமாக இருக்கும்… திறந்த வீட்டில் நாய் வந்து போவது போல… எப்போது வேண்டுமானாலும் கட்சிக்கு வந்து விட்டு போகலாம்…

இப்போதைக்கு காங்கிரஸில் செல்வாக்கான தலைவர்கள்…

1. சிங்கள தலைவர் ராஜபக்சே…

2. ஜெயலலிதா…

3. மருத்துவர் ராமதாசு – கிருஷணசாமியின் சம்பந்தி என்பதால்…

மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதை… ஜெ காங்கிரஸ் கமிட்டி என்றோ… சிங்கள காங்கிரஸ் கமிட்டி என்றோ… ராஜபக்சே காங்கிரஸ் கமிட்டி என்றோ… கோத்தபயா காங்கிரஸ் கமிட்டி என்றோ மாற்றிக் கொண்டால்… அதன் செயல்பாடுகளுக்கு சரியாக இருக்கும்…

சரி இவர்களுக்கு உள்ள ஒற்றுமையை பார்ப்போம்..

1)தமிழுணர்வு எங்கே வந்து விடும் என்று சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவது இல்லை..
2)தேச பிதா ராஜீவ் காந்திக்காக தீக்குளித்து உயிரை விட துணிபவர்கள்..
3)தமிழர்களுக்கு எதிரான ஒக்கெனக்கல் பிரச்சனையில் இருந்து ..எந்த பிரச்சனையிலும் தங்கள் ஓலவாயை திறப்பது இல்லை..
4)அடிக்கடி காமராசார் ஆட்சியை கனவிலேயே நிறுவுவது..
5)வட ‘இந்தி’ய ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்வது..காதுகுத்து பூ முடிப்பு என தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் அடிமை தனத்தை நிருபிப்பது..
6)’இந்தி’ய ஒற்றுமை பற்றி வாய்கிழிய பேசுவது ஆனால் சத்தியமூர்த்தி பவனில்
ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டு சாவது..

December 26, 2008 Posted by | Uncategorized | கருத்துத் தெரிவிக்கவும்

இந்தியாவின் தமிழின அழிப்பு என்ற உள்ளூரவு கொள்கையே-வெளியுறவு கொள்கையாகும்!

null

ஒரு இனத்தினை அழிக்க வேண்டும் என்றால் ஒன்று போரிட்டு சென்று அழிக்க வேண்டும் அல்லது கூட இருந்தே குழிபறித்து அழிக்க வேண்டும் இதில் ஆரிய பார்பணிய இந்தியா தேர்ந்தெடுப்பது இரண்டாவது வழிமுறையாகும்..

ஒரு இனத்தின் பண்பாடு, மொழி, வரலாறு, நீர் ஆதாரம், வீரம், முதலியன இதில் இந்தி தேசியத்தினால் உள்வாங்கபட்ட தமிழர் நாடானது ஒன்றாவது முழு பேறு அடைந்துள்ளதா? செம்மொழி அந்தஸ்துக்குரிய நமது தாய் தமிழ் மொழியின் வரலாற்றினை 2000 ஆண்டுகளுக்கு கீழாக குறைத்து பிற சவ மொழிகளை செம்மொழி அந்தஸ்திற்கு உட்படுத்தியது யார்?

செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!ஆனால் எவ்வளவோ பேருக்கு நாடாளுமன்றதில் சிலையிருக்க ஒரு தமிழனின் சிலையும் காண
முடியவிலலையே!ஒரு தமிழ்தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய செய்தியை கேட்டதுண்டா?அதே போல் காவிரி பிரச்சனையில் கன்னடருக்கு ஒத்துழைப்பதையும் நாம் நன்றாக அறிவோம் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை(1991) ராணுவத்தை அணுப்பாமல் தூரநின்று கைகொட்டி சிரித்தது ஒக்கேனக்கல் பிரச்சனையில் தாம் தலையிட மாட்டோம் நீங்களே பேசி தீருங்கள் என தூர நின்று வேடிக்கை பார்பதையும் அறிவோம்..

காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை கன்னடர்கள் தூக்கி கடாசிய போது தூர நின்று ரசித்த ‘இந்தி’ அரசு தமிழருக்கு நன்மை பயக்கும் திட்டமான சேது சமுத்திரத்திட்டதினை நிறுத்த ஞாயிற்று கிழமையும் உச்ச நீதி மன்றத்தினை திறந்து வைத்து விசாரித்தது அதே போல தான் கொல்டிக்களின் பாலாற்று பிரச்சனையிலும் தனது தமிழன விரோத போக்கை காட்டி வருகிறது..

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 406 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு?

சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா? மலையக தமிழர்கள் நாடற்றோர் ஆக்கபட்டதிற்கு யார் மூல காரணம் அவாள் லால் பகதூர் சாஸ்திரி தானே?

காண்க ஒளிப்படம்:http://in.youtube.com/watch?v=dB0313W97d0

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள் இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்!

காண்க ஒளிப்படம்:http://in.youtube.com/watch?v=nKsPO4Ziios

இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!
எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்! இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன..

புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி
கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை
உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.
அது ஈழ தமிழர்களுக்கும் சரி தமிழக தமிழர்களுக்கும் சரி!தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்..அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!

புரட்சியை வெளியில் தேடாதே!! அது உன் உள்ளத்திலேயே உள்ளது!–லெனின்

December 25, 2008 Posted by | Uncategorized | கருத்துத் தெரிவிக்கவும்

தமிழனின் சொரணையும், புதுடெல்லி ஏகாதிபத்தியதிற்கான அவன் விசுவாசமும்

election

தமிழர்களுக்கு எதிரான இனபடுகொலைகளின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன ‘இந்தி்’ய அரசு ஐ.நா மன்றத்தில்,மனித உரிமை வாக்கெடுப்பில்.. இலங்கையில் ஒரு சாவும் விழவில்லை..என சிங்கள தூதுவரை கட்டிபிடித்து இந்திய தூதுவர் முத்தம் கொடுத்து கொண்டது ஏன்? இந்தி அரசின் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்சி செய்பவர்கள் தமிழர்களின் இன எதிரிகளே!.பாக்கு நீரிணையின் அந்த பக்கம் இருந்தால் என்ன? இந்த பக்கம் இருந்தால் என்ன? தமிழினமே எதிரி என்று இந்தி அரசு செயல்படுகிறது!!

வட்டியில்லாமல் இலங்கை இராணுவத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் உதவியளிக்கிறதே! விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்கிற சாக்கில் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க எண்ணுகிறது இலங்கை. அந்த நாட்டிற்கு ‘இராடார்’ கருவி, கருவிப்பயிற்சி, ‘தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பிவைப்பது என உதவிகளை இந்தியா வாரி வழங்குவது ஏன்? தமிழர்கள் இந்திய அரசின் எதிரிகளாவர்! எவன் ஒருவன் தன்மீது திருப்பி தாக்க மாட்டான் என தெரிந்து கொண்டே அவன் மீது தாக்குதல் நடத்துவதுதான் உலகின் மிகபெரிய வன்முறையாகும்.. இது திருப்பிதாக்க தெரியாத 5 வயது பாலகனை மிதிப்பது போன்றதாகும் உலகத்தில் எந்த நாட்டு அரசினாலும் தட்டி கேட்க இயலாத நாதியற்ற தமிழினத்தின் மீது திட்டமிட்டு தனது கொடுரங்களை
தொடர்கிறது

உகாண்டா நாட்டில் சர்க்கரை ஆலை ஒன்றை கட்டுவதற்கு குசராத்தை சார்ந்தவர்கள் முயன்ற போது, சொந்த நாட்டின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த உகாண்டா மக்கள் ஒரு குசராத் சேட்டை கொன்றனர். என்ன நடந்தது? பா.ச.க அத்வானி ஓடிச் சென்று நேரடியாக வெளியுறவு அமைச்சகத்துக்கே சென்று இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உகாண்டாவின் இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக மீனவர்கள் இங்கு சிங்கள் வெறியநாய்களின் வேட்டைக்கு ஆளாகி செத்துக் கொண்டிருக்கும் ”தமிழின”த் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு அவர்கள் போடும் பணம்,பதவிக்கு பல்லக்குத் தூக்கி தமிழினத்தை M.P சீட்டுகளாக விற்று பிழைப்பு நடத்தக்கூடிய திராவிட, தேசிய கட்சிகளின் போலி முகங்களை தமிழக மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.உலகச்சாதனை எனக்கூறக்கூடிய அளவில் அறுபது ஐரத்திற்கு (கிலோமீட்டர்) மனிதச்சங்கிலி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்கள், சட்டமன்றத்தில் தீர்மானம், திரைத்துறைப் போராட்டம், வணிகர் போராட்டம், உண்ணாநிலை என காந்திய வழியில் அனைத்துப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். அதன்பின்னும் இலங்கை அதிபர் ‘போரைத் தொடர்வோம்’ என மன்மோகன்சிங்கைச் சந்தித்தபிறகு புதுதில்லியிலேயே அறிவிக்கிறார்.

”நீங்க திட்டுங்க.. அறிக்கை விடுங்க.. எங்கையாவது போய் போராட்டம் கூட பண்ணுங்க.. நாங்க ஆயுதம் கொடுத்துண்டு தான் இருப்போம்” என்று செயல்படும் மத்திய அரசிடம் தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் பதவி அரசியல் செய்து ஈழத்தமிழர்களை ஒழிக்க நினைக்கும் சிங்கள அரசுக்கு மறைமுகமாக துணை போகின்றன. அங்கு சிந்தப்படுவது தமிழனின் குருதி என்பதை இவர்கள் என்று உணரப்போகிறார்களோ தெரியவில்லை. இங்கிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தை தடுக்க யோக்கியதை இல்லாத மத்திய கப்பற்படையும் தமிழக அரசும் வாய்ச்சவடால் பேசியே காலம் ஓட்டுவதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிடும் என எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் டீலர்கள் அந்த கடிதத்தால் என்ன நடந்தது என்று எண்ணிப் பார்த்ததுண்டா? அதை இந்திகாரன் ஆகா வந்துடுச்சுடா பேப்பர் என்று மிளகாய் பஜ்ஜியை வைத்து சாப்பிட்டு தூக்கி கடாசியிறுப்பான்!

இவ்வளவு நடந்த பின்னரும் இளிச்சவாய் தமிழர்களான நாம் ஓட்டுப்போட்டு புதுடில்லி ஏகாதிபதியத்திற்கு விசுவாசத்தை காட்டி வெற்றி பெற வைக்கப்போவது உறுதி!.நமக்கு என்ன பிரச்சனை நாம அடுத்த நாள் சோறு பொங்கனும் சீரியல் பாக்கணும்.. அடுத்து அசினு,நயந்தாரா என்று கனவு காணணும்.. மக்களுக்கு இல்லாத ரோசம் தலைவர்களுக்கு மட்டும் வந்துவிடுமா என்ன? காலம் பதில் சொல்லும் என நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்…. தமிழக ஓட்டு அரசியல் கட்சிகள் தாம் தமிழினத்தின் சாபமும் சோகமும்.. மக்கள் இதனை புரிந்து கொள்ளாதவரை தமிழனை கடலில் மட்டுமல்ல நம் வீட்டுகே வந்து கூட சுட்டுவிட்டு போவான் சிங்களன்.. தமிழா இன உணர்வு கொள்! அது தெரியவில்லையென்றால் ஒரு சீக்கிய இனத்தை பார்த்து மாராத்தியனை பார்த்து
இவ்வளவு ஏன் உன்னை வருடம் முழுவதும் ஏதாவது காரணம் சொல்லி அடிக்கும் கன்னடனை பார்த்து கற்று கொள்!

December 18, 2008 Posted by | Uncategorized | , | 5 மறுமொழிகள்

புது டெல்லி ஏகாதிபத்தியத்தின் தமிழின எதிர்ப்பு தில்லா லங்கடி வேலைகள் அனைத்தும் நாம் அறிந்தவையே

முல்லைபெரியாறு பிரச்சனையில் தாம் மலையாளிகள் பக்கம் என தமது ‘இந்தி’ய கடற்படையை அனுப்பி ‘தமிழ்’நாட்டு காவல்துறையை தடுத்து நிறுத்தி நிபுணர்களை அணையை அளவேடுக்க

விடாமல் தடுத்து நிறுத்தி விட்டது..

ஒரு லட்சத்தி அறுபதுநாயிரம் கோடியை தனது பாதுகாப்புக்கு ஒதுக்குகிற ஒரு தேசம் தனது தேசத்தின் பிள்ளைகளை(தமிழர்கள்) சுட்டு கொன்ற சிங்கள ராணுவத்தை நோக்கி ஒரு முறையாவது

சுட்டுள்ளதா? ஒரு செய்தியை நீங்கள் படித்ததுண்டா?பாகிச்சானோடு சீனாவோடு சீறும் ‘இந்தி’ய தோட்டாக்கள் சிங்கள கடற்படையை நோக்கி சீறவில்லையே ஏன்? ஆரியன் சிங்களவனின்

பங்காளி!

தமிழர்களுக்கு எதிரான மும்பை கலவரத்தில் ராணுவத்தை அனுப்பவில்லை ஆனால் இந்தியை தமிழர்கள் எதிர்கிறார்கள் என்றவுடன் ராணுவத்தை அனுப்பி தமிழனை வேட்டையாடியது

எதற்காக?தமிழர் நிலமான நெய்வேலியில் நிலக்கரியை சுரண்டி தமிழ்நாடே இருளில் மூழ்கி கிடக்கும் போது அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் என்ற பெயரில் அனுப்புவது யார்?நெய்வேலியில்

‘இந்தி’ அரசு சுரண்டிய தமிழக விவசாயிகளின் நிலங்களுக்கு ஏன் இதுவரை நிவாரணம் அளிக்கவில்லை?அவர்கள் தமிழர்கள் என்பதால் தானே?நரிமணத்தில் இருந்து தமிழர்களுக்கு வரி பணம்

எதுவும் கொடுக்காமல் இயற்கை எரிவாயுவை திருடி செல்வது யார்? அசாம் மாநிலத்தில் இதே இயற்கை எரிவாயுக்காக வரி பணத்தை ஏன் ‘இந்தி’ அரசு கொடுக்கிறது?

எல்லா மாநிலங்களிலும் அணுமின்சார நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இத்தனைக்கும் கன்னடர்கள் அனல் மின் சார நிலையத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்க கன்னட அரசு

கன்னட மக்களுக்காக சட்டீஷ்கரில் அனல் மின்சார நிலையம் அமைக்க இருக்கிறது! இந்த ‘இந்தி’ய அரசு தமிழ்நாட்டில் அணு உலைகளுக்கு மேல் அணு உலைகளை கட்டிகொண்டு போவதன்

காரணமென்ன? எப்படியும் மூன்றாம் உலக போர் மூண்டால் சாக போகின்றவர்கள் தமிழர்கள் என்பதாலா?

சரந்தீபு சிங்கின் மரண தண்டனைக்கு தாம் தூம் என குதிக்கும் இந்தி அரசு மலேசிய தமிழர்கள் பிரச்சனை குவைத்து தமிழர்கள் பிரச்சனை என வந்தால் கவலையாளிக்கிறது.. வருத்தமளிக்கிறது

என பம்முவது எதற்காக?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான்

செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!ஆனால் எவ்வளவோ பேருக்கு நாடாளுமன்றதில் சிலையிருக்க ஒரு தமிழனின் சிலையும் காண

முடியவிலலையே!ஒரு தமிழ்தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய செய்தியை கேட்டதுண்டா?

அதே போல் காவிரி பிரச்சனையில் கன்னடருக்கு ஒத்துழைப்பதையும் நாம் நன்றாக அறிவோம் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை(1991) ராணுவத்தை அணுப்பாமல் தூரநின்று

கைகொட்டி சிரித்தது.. ஒக்கேனக்கல் பிரச்சனையில் தாம் தலையிட மாட்டோம் நீங்களே பேசி தீருங்கள் என தூர நின்று வேடிக்கை பார்பதையும் அறிவோம்.. காவிரி நடுவர் மன்ற இடைக்கால

தீர்ப்பை கன்னடர்கள் தூக்கி கடாசிய போது தூர நின்று ரசித்த ‘இந்தி’ அரசு தமிழருக்கு நன்மை
பயக்கும் திட்டமான சேது சமுத்திரத்திட்டதினை நிறுத்த ஞாயிற்று கிழமையும் உச்ச நீதி மன்றத்தினை திறந்து வைத்து விசாரித்தது அதே போல தான் கொல்டிக்களின் பாலாற்று பிரச்சனையிலும்

தனது தமிழன விரோத போக்கை காட்டி வருகிறது..

தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்! இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம்

இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறது

தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள் எனவே தமிழீழம் சாத்தியமில்லை என்கிறார் மார் கசிய கம்னுசுட் கட்சியின் அவாள் திரு வரதராசன் அதாவது சாக்கடை பிராணியான சிங்களவனும்

பண்பாட்டில் சிறந்த தமிழர்களும் ஒன்று என்கிறார் சுருக்கமாக சொன்னால் சிங்களவனுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்கிறார்..

போர் நிறுத்தத்தை மிறீயது யார் என்று தெரியாமலே அறிக்கை விட்டு திரிகிறார் இந்திய கம்னுச்டு கட்சியின் தலைவர் பாண்டியன்..தமிழின எதிரியான இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது

இருபத்திநாலு மணி நேரமும் கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து வந்தேறியான பாப்பாத்தி

செயலலிதாவும்,இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் மாமாவும் ரா-மு ரா-பி (ராசிவ் காந்திக்கு முன் ராசிவ் காந்திக்கு பின்) என ஈழ

விடுதலையை பிரித்து பார்க்குமாறு புது டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு வேண்டு கோள் விடுக்கும் கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள்

என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

இவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை

ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனி

கொள்கை எதுவும் இல்லை!இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை

உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.
அது ஈழ தமிழர்களுக்கும் சரி தமிழக தமிழர்களுக்கும் சரி!

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!

ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழீழ விடுதலையை வென்றெடுக்கத் தளபதி பிரபாகரன் அவர்களின் கரங்களை வலுப் படுத்துவதே சரியான வழி!விடுதலைப்

புலிகளுக்கு ஆதரவு தரத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!

December 8, 2008 Posted by | Uncategorized | 1 மறுமொழி

மவுண் ரோடு மகாவிஷ்ணுவின் பயிறு இறையும் நாள் என்னாளோ?

சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் ‘இந்தி’யத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய ‘இந்தி’யத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் ‘இந்து’ உள்ளிட்ட ஆரிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர்
இந்து பத்திரிகையை பொறுத்தளவில் கல் எங்கே பட்டாலும் காலைத் தூக்கும் பிராணி போல தமிழ்நாட்டில் எது நடந்தாலும் விடுதலை புலிகளை அதோடு வலிந்து இணைத்து பழி சுமத்தும் பத்திரிகையை என்பது எல்லோரும் அறிந்ததே.

சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், “புலிகள் 100 பேர் பலி – 200 பேர் பலி” என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் ஆரிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன. இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் ஆரிய “இந்து” இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், தமிழ்நாட்டில் தமிழர்கள் வீணாக ஈழ தமிழர்களுக்காக போராடுகிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு மாலினி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில்,தமிழன் சோற்றில், சென்னை – மவுண் ரோட்டில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் “லங்கரத்னா” விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் – ஆரியனுக்கு எதிரி தேசம்” – என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து – ராம்களால் தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

காசுமீர்,நாகலாந்து,இவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மும்பை குண்டுவெடிப்பை கூட கண்டித்து தலையங்கம் தீட்ட வேண்டியதுதானே? பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள்! போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே!.இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே வீடு தேடி வந்து கொட்டை பயிறுகள் இறைக்கபட்டு விடும்

தமிழர்,தமிழ்நாடு விவகாரம் என்றால் துள்ளி கொண்டு தலையங்கம் தீட்டுவது ஏன்? தமிழன் இளிச்சவாயன் ..எருமை மாடுகளோடு யாருக்கு உணர்வு அதிகம் என்று சவால் விடுபவன்.. இன்னைய நிலையில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைபட்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டு உள்ள தமிழனை ஒற்றுமை படுத்தி தமிழ் இன உணர்வை ஊட்டுவதே இன்று தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு உள்ள கடமையாகும்..
என்றாவது ஒரு நாள் தமிழன் விழித்தேழும் போது தின ம..,ராம் கம்பனிகளின் பயிறுகளும் இறைக்கபடும்

December 4, 2008 Posted by | Uncategorized | 1 மறுமொழி

‘இந்தி’அரசின் அண்ட புளுகும் அதன் அடிவருடும் ஆரிய ஊடகங்களும்

கச்சத் தீவுக்கு அருகில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்ளதாக சொல்ல முடியாது – மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது

-கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தபட போவதில்லை-’இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன்

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த “சாஸ்திரி”, பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் ‘இந்தி’யாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.
இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் ‘இந்தி’ய அரசு தயங்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு ‘இந்தி’யா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான ‘இந்தி’யாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது.துப்பாக்கி சுடும் போர்பயிற்சியை பழகுகிறது ‘இந்தி’யக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை.ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 400ல் ஒருவருக்குக்கூட ‘இந்தி’ய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை..

தமிழ்நாடு ‘இந்தி’யாவில்தான் இருக்கிறதா? என்று கருதவேண்டியுள்ளது.சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய ‘இந்தி’ய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது.சர்வதேச கடல் எல்லையை குசராத், மகாராட்டிர மீனவர்கள் தாண்டும்போது, பாகிஸ்தான் அந்த மீனவர்களை சுட்டுத்தள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் ‘இந்தி’யாவிடம் ஒப்படைத்தது.கடந்த சார்க் மாநாட்டின் போது கொழும்பில் வைத்து ‘இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் எனைய அதிகாரிகள் பூட்டிய அறைக்குள் சிங்கள அதிபன் ராசபக்சே யுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதில் வழங்க பட்ட உறுதிமொழி கடலில் உங்கள் ஆளுமையை நிலை நிறுத்திக்கொள்ள தேவையேற்பட்டால் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்காதீர்கள்! என்று இனவாத சிங்கள அரசுக்கு இந்திய மத்திய அரசு இரகசிய சைகை காட்டி விட்டது என்றே நினைக்கவேண்டியுள்ளது

தமிழ்நாட்டில் ராய்ட்டர்ஸ், பி.ரி.ஐ., யு.என்.ஐ. போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை அப்படியே போட்டு வந்தவர்கள் இப்போது சிறிலங்கா துணைத் தூதுவராக இருக்கின்ற அம்சா போடுக்கின்ற எலும்புதுண்டுகளுக்காக இலங்கைக்கு ஆதரவான செய்திகளைத்தான் போடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்க வேண்டியவர்கள் எட்டப்பனின் ஐந்தாம் படைகளாக இருக்கிறார்கள். அப்படியான ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகளை நாம் செய்ய வேண்டும்.

December 4, 2008 Posted by | Uncategorized | கருத்துத் தெரிவிக்கவும்

யார் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தமிழா

தம்மை ஆரியர்கள் எனவும், சமக்கிருதம் தமது மொழி எனவும் ஆரியசமாஜங்கள், ஆரிய கழகங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு தம்மை உயர்ந்த ஆரியர்கள் எனவும் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இணையத்தளங்களில் உலாவும் போது மட்டும் தமிழ் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, ஆரியப்படையெடுப்பு உண்மையில்லை, அதற்கான ஆதாரமெதுவுமில்லையென்றும் கூட பதிவுகள் செய்வதைப் பார்க்கும் போது அவர்களின் பச்சோந்தித் தனம் மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை அதேவேளையில் மீசைக்கும் ஆசைப்படும் அவர்களைப் பார்க்க அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகிறது.

அந்தளவுடன் நிறுத்தி விடுகிறார்களா?, இல்லை. ஆரியப் படையெடுப்பு என்பது கிடையாது ஆனால் நாங்கள் ஆரியர்கள், நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, இந்தியாவைச் சேர்ந்தவ்ர்கள் தான் ஆனால் ஆரியர்களாகிய எங்களிடமிருந்து தான் தமிழர்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்களுக்கு அதிகப் பிரியம். அதனால் ஈழத்தமிழர்களையும் இளிச்ச வாயர்களாக நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமது ஆரிய பிராமண மேலாதிக்கத்தை, அறிமுகமேயில்லாதவர்களின் கட்டுரைகளினாலும், இணைப்புக்களின் மூலமும் ‘நிரூபிக்கப்’ பாடுபடும், பல பார்ப்பனப் பரதேசிகள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்குக் குழிபறிக்கும் போது, தமிழர்களுக்கு விடிவு காலமேற்படுமா?

தமிழினம் இன்று சிங்களவர்களால் படும் நெருக்கடியை விட, தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களுக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்களின் நெருக்கடி பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. சிங்களவர்களின் நேரடி எதிர்ப்பை முகம் கொள்வதை விட, பார்ப்பனர்களின் மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்வது தமிழினத்துக்கு என்றும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் யாவரும் கட்சி வேறுபாடின்றி இலங்கை சனாதிபதியைச் சந்திக்க மறுத்து ஈழத்தமிழர்களுக்காக தமது சகோதரத்துவத்தைக் காட்டிய போது, தமிழர்களின் முகத்திலறைந்து விட்டு, இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது மட்டுமல்ல, தனது வீட்டுக்கும் அழைத்து விருந்து வைத்தது யார்? வேறு யாருமல்ல, அதுவும் தமிழ் பேசும் பார்ப்பான் தான்.

ஈழத்தமிழினம் படுகொலை செய்யப்படும் போது, ஈழத்தமிழினம் அழிக்கப்படும் போது அதற்குத் துணைபோய், இலங்கை அரசுடன், இந்திய அரசுக்குத் தெரியாமலே பாதுகாப்புக்குழு அமைத்துத் தமிழர்களை அழிக்கச் சதி செய்வது வேறு யாருமல்ல, அதுவும் ஒரு பார்ப்பான் தான்.

ஈழவிடுதலையைக் கொச்சைப் படுத்தி, பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிச் சிங்களவர்களுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களும் பார்ப்பனர்கள் தாம்.

உண்மையிலேயே எப்படித்தான் தமிழைப் பேசித் தமிழால், தமிழர்களின் தயவில் வாழ்ந்தாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதேயில்லை. இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழர்களுடன், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, அவர்களை ஆதரித்த, இன மக்களுக்கெதிராக இயங்கும், உலகின் முதலாவது மனிதக்குழு பார்ப்பனர்களாகத் தானிருக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகையின் “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வரிகளைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.

பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள், சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்பதாகும், அவர்களின் முன்னோர்கள் ஆரியவர்த்தாவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தான் பார்ப்பனத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இணையத்தளங்களும், மனுச்மிருதியும் கூறுகின்றன். அதனால் தான் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாக இருந்த இந்த இணையத் தளத்திலேயே “ஆரிய” பார்ப்பனர்கள் நாசூக்காக தமது ஆரிய மேலாதிக்கத்தையும், சங்கத்தமிழில் கூட ஆரியர்களைப் பற்றிக் கூறப்பட்ட்டுள்ளது என ஆரம்பித்து, சங்கத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஆரியர்கள் தான் என நிரூபிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள் போலிருக்கிறது. சங்கத்தமிழில் ஆரியர்கள் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது, அதனால் வந்தேறி ஆரியர்களுக்கும் சங்கத்தமிழுக்கும் தொடர்பு என்றோ அல்லது ஆரியர்களிடமிருந்து தான் சங்கத்தமிழ்ப் பாடல்கள் உருவாகின என்றாகி விடுமா.

தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனித்துவமான மொழி, கலாச்சார அடையாளங்களைக் குலைத்துக் கொச்சைப்படுத்தி, அவற்றைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாக அல்லது தமிழர்களின் தனித்துவமான இணையற்ற் மொழி, கலாச்சார, இலக்கியங்களில் ஆரியக்கலப்பிருப்பதாக இணைய்த்தளங்களில் ‘நிரூபிக்க’ பார்ப்பன பிரியர்கள் பலர் கிளம்பியிருப்பதை நாம் காணலாம். ஆனால் பார்ப்பனப் பிரியர்கள் என்னதான் இங்கு தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பித்தாலும், தமிழர்களின் அறிவு, கலை, கட்டிட, தொழிநுட்பத்துக்குள் வந்தேறி ஆரியர்களையும் நுழைத்துப் பங்கு கேட்டுத் தமிழர்களையும், தமிழையும் தாழ்மைப்படுத்த முனைந்தாலும் தமிழர்கள் வந்தேறி ஆரியர்களை நம்மவர்களாகவே எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. வடக்கர்களை தம்மிலிருந்து விலக்கித் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்களின் வரலாற்றில் போதியளவு ஆதாரங்களுண்டு.

கிறித்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுத் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றில் ஒரு இளந்தமிழ்ப் பெண் கூறுகிறாளாம் ” எப்படிச் சோழர்கள் ஆரியர்களை வல்லத்தில் நொருக்கினார்களோ அப்படி என்னுடைய வளையல்களை நொருக்குகிறேன் பார்” என்று.(யாராவது தெரிந்தவர்கள் அந்தப் பாடலைத் தரவும்)

அது மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் பழித்தார்கள் என்பதற்காகப் படையெடுத்துப் போய் ஆரிய வடக்கர்களை கல் சுமக்கச் செய்து, தமிழ்த்தாய்க்குச் சிலையெடுத்ததும், கங்கை வரை படையெடுத்து, வடக்கர்களைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த வரலாறும், எமது முன்னோர்கள் ஆரியர்களை எதிரிகளாகத் தான் கருதினார்கள் என்பதற்காகச் சான்றாக எம்மிடமுண்டு.

அதனால் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் என்ன தான் ஆரியக் கூத்தாடினாலும். ஏமாந்து போகாமல், அவர்களின் கோமாளிக் கூத்தை மட்டும் இரசித்து விட்டுக் காரியத்தில் கண்ணாக, விழிப்புடன் இருக்க வேண்டியது தான் உலகத்தமிழர்களின் கடமையாகும்.

December 4, 2008 Posted by | Uncategorized | 3 மறுமொழிகள்

வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது.

December 4, 2008 Posted by | Uncategorized | 5 மறுமொழிகள்

   

Follow

Get every new post delivered to your Inbox.