புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

அவன் பங்காளிக்கு அவன் உதவட்டும்! நம் பங்காளிக்கு நாம் உதவுவோம்

    அவன் பங்காளிக்கு அவன் உதவட்டும்! நம் பங்காளிக்கு நாம் உதவுவோம்

ராஜ பக்சவெ ஏன் திட்டுகிறீர்கள் ..மன்மோகன் சிங்கை ஏன் திட்டுகிறீர்கள் ? முன்பு நாம் கூறியது போலவே ஆரியன் ஆரியனுக்கு உதவுவான் இது இயற்கை .. வரலாறு.. நாம் நம்முடைய பங்காளிக்கு சோழர்கள் காலம் தொட்டு உதவிவருகிறோம் இதுவும் வரலாறு..ஆகவே அவன் அவனுடைய பங்காளிக்கு உதவட்டும் நாம் நம்முடைய பங்காளிக்கு உதவுவோம் இது கடமை..

செத்து விழுந்த மீனவன் 400 பேரும் நீங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்து இருந்தால் சிங்களவனை ஒரு முறையாவது சுட்டு இருப்பீர்கள் ..ஆக நாங்கள் வேறுதானே!உலகின் 4 வது கடற்படை ஒரு சின்ன பதினெட்டு கிலோ மீட்டரை பாதுகாக்க முடியாதா?கச்சதீவு தமிழருடையா பாரம்பரிய பூமி! அதை ஏன் நீங்கள் சிங்களவனிடம் கொடுத்தீர்கள் ..அதாவது இலங்கை அப்போது அமெரிக்காவின் பக்கம் சாய்கிறதாம்..அதை தடுத்து நிறுத்த ஏதோ எங்கள் வீட்டு சொத்தை பர்த்து டே கேக்கு மாதிரி கொடுத்து விட்டீர்கள்! ஆமா நீங்கள் இப்போது யார் பக்கம் குண்டி கழுவி கொண்டிருக்கிறீர்கள்?அதே அமெரிக்கா தானே! திரும்ப வாங்க வேண்டியது தானே!

பாகிஷ்தான் காரனிடம் காஷ்மீரை கொடுத்தால் நாம் சமாதானமாக வாழலாம் அல்லவா?அதே போல் அருணாசலத்தை சீனாவிடம் கொடுத்தால் நாமும் அவர்களும் உடன் பிறப்புகள் ஆகிவிடலாம் அல்லவா?பஞ்சாபில் இருந்து அரை அடி.. மாராத்திகாரனிடமிருந்து ஒரு அரை அடி.. வேறு நாட்டானிடம் கொடுக்க முடியுமா? கொன்னுடுவான் சீக்கியன் வெட்டி பொடுவான் மராத்தி! ஆனா இங்கே! தமிழன் இளிச்ச வாயன் ! எருமை மாடு!

இந்திய தேசியம் பேசும் பன்னாடைகள் சாப்பிடும் ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மீனவனுடைய உயிர்!இந்த இந்தி பன்னாடைகள் அப்புறம் ஏன் ஏற்றுமதி வரி அது இது என்று வந்து நிற்கிறீர்கள்!பரதேசிகளா!

இலங்கை சீனாவிடமும் பாகிக்கிஷ்தானிடமும் ஆயுதம் வாங்குதாம் அது இந்தியாவுக்கு ஆபத்தாம்!அதே பாகிஷ்தான் தான் அமெரிக்காவிடம் ஆ யுதம் வாங்குறான் இது இந்தியாவிற்க்கு ஆபத்தல்லவா?எனவே நாம் முந்திக்கொண்டு பாகிஷ்தான்காரானுக்கு ஆயுதம் கொடுப்பதுதானே முறை!

செத்து விழுந்த மீனவர்களின் உடலை பார்த்து ஒரே ஒரு கண்டன அறிக்கை இலங்கை அரசை நோக்கி வீசப்பட்டிருந்தால் நாம் இந்தியதேசத்தை பாராட்டலாம்! செத்தவன் நம் இன விரோதி ஒழிந்தான் பீடை என நீங்கள் நினைத்ததால் இறந்தவனுடைய சுடுகாட்டில் இன்று தமிழ் தேசியம் பிறந்து விட்டது!

நவம்பர் 22, 2008 Posted by | Uncategorized | | கருத்துத் தெரிவிக்கவும்

இந்தி’தேசியம் பேசும் பன்னாடைகளுக்கு தமிழ் உணர்வை கற்க சில யோசனைகள்

    இந்தி’தேசியம் பேசும் பன்னாடைகளுக்கு தமிழ் உணர்வை கற்க சில யோசனைகள்

1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடமோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.

2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..

3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..

4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்கபடும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்

5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..

6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டராக கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்

–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!

நவம்பர் 22, 2008 Posted by | Uncategorized | | கருத்துத் தெரிவிக்கவும்

வெளியுறவு கொள்கை என்பது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே

வெளியுறவு கொள்கை என்பது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்..
அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!
எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.

நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்..
அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..

நவம்பர் 22, 2008 Posted by | Uncategorized | | கருத்துத் தெரிவிக்கவும்

ஆரியன் சிங்களவனின் பங்காளி

    சில செய்திகள் கூறும் உண்மையும்–புரிந்தும் நடிக்கும் பொறம்போக்குகளின் அரசியலும்

1. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ஒரு வகை போர் கொள்கைதான். அதுமட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் ஆதிக்க சக்தியாகத் திகழ்வதற்கு ஈழ தமிழ் மக்களை அழிக்கும் இந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்.(அப்போ தமிழர்கள் மனிதர்கள் இல்லை எருமைகள்)

—-மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜு

2.நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை .எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது
—-காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி(அப்போ 40 எம்பி சீட்டு கொடுத்தாலும் நாங்க வேற நாடு தானே!)

ஆக இந்த செய்திகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களை நாங்கள் எருமை மாடுகளிலும் கேவலமாகவே கருதுகிறோம்!.. ஆரிய ‘இந்தி’யாவை எதிர்த்து எதுவும் உங்களால் செய்ய முடியாது!
நெய்வேலியில் இருந்து நிலக்கரியை திருடி அண்டை கருநாகத்தானுக்கும் கொலையாளிக்கும் மின்சாரம் என்ற பெயரில் எவன் கொடுப்பது?நரிமணத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை திருடுபவன் யார்? எல்லாம் ‘இந்தி’ அரசுதானே? சுனாமியால் தமிழகம் துயருற்ற போது 5 பைசா கூட கொடுக்காமல் வந்து உதவி செய்ய இருந்த நாடுகளையும் தடுத்து.. நேரடியாக 5 கப்பல்கள் மூலம் உங்கள் ஆரிய சகோதரனான சிங்களவனுக்கு உதவி பொருட்கள் அனுப்பியவர்தானே நீங்கள்!நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு குருவி போல சேர்த்த பொருட்கள் எல்லாம் இன்று குப்பையாக மாறிவிட்டன!தமிழனின் சொரனை எங்கே போனது?

உங்கள் வளத்துக்கு அப்துல் கலாம் தேவை படுக்கிறார் ,பாகிஷ்தானோடு சண்டை போட மேஜர் சரவணன் போன்ற ஆள்கள் தேவை படுகிறார்கள்,கொடி நாள் வசூலில் தமிழகம் முதலில் நிற்க ஆசைபடுகிறீர்கள்! ஆனால் நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க கூடாது!

ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த ‘இந்தி’யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். ‘இந்தி’யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

சிங்கின் தலைப்பாகை பிரச்சனைக்கு பிரான்சு அதிபரோடு கடிந்து கொண்ட மன்மோகன்’சிங்கு’ தமிழனின் தலை போகும் பிரச்சனைக்கும் பம்மாத்து காட்டுவதன் நோக்கமேன்ன?ஆரியன் சிங்களவனின் பங்காளி! 6 1/2 கோடி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துகிற ஒரு தேசத்தில் இன்னும் நாம் இருக்கத்தான் வேண்டுமா? தமிழன்னை நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை பிறகு ஏன் நாம் இவர்களிடம் கை ஏந்தி கொண்டு? நம் உணர்வுக்கும் சிந்தனைக்கும் தடை போட இவர்கள் யார்?சுடு சொரனை உள்ள அனைத்து தமிழர்களும் சிந்திப்பீர்!

நவம்பர் 22, 2008 Posted by | Uncategorized | | கருத்துத் தெரிவிக்கவும்

   

Follow

Get every new post delivered to your Inbox.